நம் கண்முன்னால் ஒரு பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று வேறுபாடில்லாமல் ஈசல்கள் போல் மக்கள் மடிகின்றனர். பாலஸ்தீன் எனும் தேசத்தையும் அந்தத் தேசத்தின் கூட்டு நினைவுகளையும் முற்றாக அழித்துத் துடைத்துவிட வேண்டும் என்னும் அடங்கா வெறியோடு தாக்கிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். கண்ணீரையும் கண்டனங்களையும் தவிர்த்து வேறெதையும் அளிக்க முடியவில்லை உலகால். நம்மால்.
எப்போது தொடங்கிய போர் இது? பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் அப்படியென்ன பகை? இது இரு தேசங்களுக்கு இடையிலான போரா அல்லது இரு கருத்தாக்கங்களுக்கு இடையிலான மோதலா? வரலாற்றில் அதிகம் வதைக்கப்பட்டவர்கள் யூதர்கள். மாபெரும் இன அழிப்பைச் சந்தித்து மீண்ட மக்களால் அதே போன்ற ஓர் அழிவை இன்னொரு தேசத்தின் மக்கள் மீது நிகழ்த்த முடியுமா?
பாலஸ்தீனர்கள் தரப்பில் தவறுகளே நடைபெறவில்லையா? இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் மேலை நாடுகளும் துணை நிற்பது போல் பாலஸ்தீனத்தின் பக்கம் அரபு நாடுகள் ஏன் திரள மறுக்கின்றன?
பண்டைய காலம் தொடங்கி இன்று வரையிலான பாலஸ்தீனத்தின் வலி மிகுந்த வரலாறு பிரச்சனையின் தீவிரத்தை நமக்குப் புரிய வைக்கிறது. ஏமாற்றமும் நம்பிக்கையும் ரத்தமும் கண்ணீரும் கலந்திருக்கும் அந்த வரலாற்றைப் பரிவோடு பதிவு செய்திருக்கிறார் நன்மாறன் திருநாவுக்கரசு.
Be the first to rate this book.