சித்த மருத்துவர் D.பாஸ்கரன் பாரம்பரிய சித்தர்களின் வழித் தோன்றலில் நம்பிக்கை தரும் இளைஞராகத் திகழ்கின்றார். புற்று மகரிஷி பரம்பரையின் வாரிசான பாஸ்கரன் பாரம்பரிய சித்த மருத்துவ அறிவையும் படிப்பறிவையும் (BSMS) ஒருசேரப் பெற்றுள்ளார். தனது பெரியப்பா சித்த வைத்திய மூதறிஞர் கே.பி.அர்ச்சுனன், தனது தந்தை பாரம்பரிய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டம்பாச்சாரி ஆகியோரின் பட்டறிவைத் தனதாக்கிக் கொண்டுள்ள பாஸ்கரன் நாடி பார்த்து நோய் கணிப்பதில் வல்லவர். அவரிடம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையே அவரின் மருத்துவ அறிவையும் அனுபவத்தையும் எடுத்துக்காட்டும் சாட்சியமாக விளங்குகிறது. பல்வேறு விழிப்புணர்வு முகாம்களில் மருத்துவ மூலிகை கண்காட்சிகள் அமைத்து பல தரப்பினருக்கும் அடிப்படை சித்த மருத்துவ அறிவை பரவலாக்கி உள்ளார். சித்த மருத்துவ முகாம்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் சித்த மருத்துவ கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் இந்நூலாக உருப்பெற்றுள்ளது.
Be the first to rate this book.