ஜெர்மன் எழுத்தாளர் ஜோஹன் டேவிட் வைஸ் எழுதிய ஒரே நாவல் ஸ்விஸ் ஃபேடிமிலி ராபின்சன். அந்த ஒரு நாவலே மிகவும் பிரமாதமாக அமைந்துவிட்டதால் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.
சூறாவளியில் சிக்கி ஒரு கப்பல் சிதைந்து போகிறது. அதில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் உயிர் பிழைக்கிறது. அருகில் ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். அந்த மனிதர்கள் இல்லாத தீவில் வினோதமான பிராணிகள், பறவைகள் இருக்கின்றன. கடும் மழை, புயலைச் சமாளித்து, உணவை உற்பத்தி செய்து, எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை மிக விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்.
Be the first to rate this book.