'இந்தியச் சிறுகதையின் தந்தை' எனப் போற்றப்படும் ரவீந்தரர், தம் சமகால சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும் அனுதாபத்தோடு சித்தரித்த்துடன் அக் கொடுமைகளைத் துணிவோடு எதிர்த்த இலட்சியப் பெண்களுக்கும் தம் படைப்புகளில் உருக்கொடுத்தார்.
பெண்களையே முக்கியப் பாத்திரங்களாக்க் கொண்ட இந்தக் கதைத் தொகுப்பில் இத்தகைய புதுமைப் பெண்களை நாம் காணலாம். தற்காலப் பெண்ணியச் சிந்தனைக்குச் சமமான தீவிரக் கருத்துக்களை இன்றைக்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டுள்ள ரவீந்தர்ரின் மனித நேயமும் தொலை நோக்கும் வியக்கத்தக்கன.
எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளராகப் பரவலாக அறிமுகம் பெற்றுள்ள சு.கிருஷ்ணமூர்த்தி பல பிறமொழி எழுத்தாளார்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். தமிழ், வங்காளி, ஆங்கில மொழிகளில் அவர் பெயர்த்துள்ள அறுபதுக்கு மேற்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
Be the first to rate this book.