அ.அருள்தாஸ் வீரப்பன் வேட்டையின்போது தமிழக, கர்நாடக அதிரடிப்படைகள் மக்கள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளுக்கு சாட்சியாக பல நூல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் இது. பர்கூர் வனப்பகுதியில் ஒரு கிரானைட் குவாரியில் மேலாளராக பணிபுரிந்த அருள்தாஸ், ‘வீரப்பனுக்கு வெடிமருந்து சப்ளை செய்தார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். அதிரடிப்படையின் ‘ஒர்க்ஷாப்’ சித்திரவதைகளை அனுபவித்தவர். அதன் காரணமாக, இன்றளவும் பல்வேறு உடல் உபாதைகளை சுமந்து கொண்டிருப்பவர். தனக்கு ஏற்பட்ட கொடூர அனுபவங்களை உரையாடல் தொனியில் விவரிக்கிறார் அருள்தாஸ். படிக்கும்போது உள்ளம் நடுங்குகிறது. அதிகாரத்தின் கொடூர கரங்களில் சிக்கித் தவித்த ஒரு அப்பாவி மனிதனின் மரண ஓலமாக வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம், இந்திய அரசியல் சட்டம் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது.
Be the first to rate this book.