நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எழுதிய இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகின்றன. அதைப்போல் வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்துக்கும் தமிழ் மொழியில் வில்லிப்புத்தூரார் எழுதிய மகாபாரதத்துக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் உள்ளன. இவறைறத்தவிர ஏடுகளில் இடம்பெறாத இராமாயண - மகாபாரதக் கதைகளும் செவிவழிக் கதைகளாகப் பேசப்படுகின்றன. இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்று கூறும் பழங்கதைகளும் உள்ளன.
Be the first to rate this book.