சிறுவர் திரைப்படங்கள் முதலில் பெற்றோர்களுக்கானது. வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது சிந்தனையைத் தூண்டி விசாலப்படுத்துவதற்கானது. பல்வேறு நெருக்கடிகளோடு திரையில் மூச்சுத் திணறி தவித்துக் கொண்டிருக்கும் அதே சிறுவர்கள்தான், நிஜத்தில் தமது இல்லங்களில் இருக்கும் உணர்வு அடக்கப்பட்ட சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது. தமது விருப்பங்களைத் திணித்து மகிழும் பொம்மைகளாக பிள்ளைகளைப் பார்க்காமல், சக மனிதர்களாக மதிக்கச்சொல்லி கற்றுத் தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்தபிறகுதான் சிறுவர் சினிமா சிறுவரை சென்றடையும். அதுவரை பெரியவர்களுக்கான விழிப்புணர்வைக் கோருவதாக மட்டுமே அதன் இலக்கு தேங்கி நிற்கும். அந்த விழிப்புணர்வின் தேவையை எழுத்தின்வழி பேச விழைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
Be the first to rate this book.