தமிழில் புறக்கணிக்கப்பட்ட அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட பார்வையாளர்கள் சிறுவர்கள்தான். சிறுவர்களின் திரையரங்க வருகையை முன்வைத்தே பல படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும், அவை எதுவும் சிறுவர்களின் அக வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களின் உண்மையான தேவையை, பிரச்சனைகளை பேசாமல், சிறுவர்களை வெறுமனே சந்தை மதிப்புள்ளவர்கலாக மட்டுமே பாவித்து வெளியானவை. தமிழில் சிறுவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் ‘சிறுவர்கள் நடித்த பெரியவர்களுக்கான படங்களே’ அன்றி, அவை உண்மையான சிறுவர்களுக்கான படங்கள் அல்ல. சிறுவர்களுக்கு சரியான சினிமா ரசனையை வளர்க்காமல் நாம் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பது சாத்தியமல்ல. சிறுவர்களுக்கான படங்கள் அதிக அளவில் வெளிவர என்னென்ன செய்ய வேண்டும், அதற்கு எத்தகைய அமைப்புகள் உதவி செய்கிறது, சிறுவர்களுக்காக இதுவரை வெளிவந்த படங்கள் என்னென்ன, அவை எந்த வகையில் சிறப்பானவை என்பதை இந்நூல் விளக்குகிறது. சிறுவர்களும், சிறுவர்களுக்காக பெரியவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.