“சிறுபான்மை நாடொன்றில் வாழும் முஸ்லிம்கள் வெறுமனே பொருளாதார வாழ்வோடும் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதோடும் தம் வாழ்வை சுருக்கிக் கொள்வார்களாயின் அது பாவமானதாகும். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டை தஃவாவின் நிலமாக (தாருத் தஃவா) கருத வேண்டும். அவ்வாறு அதனை தாருத் தஃவாவாக ஏற்றுக் கொள்வதே அங்கு வாழ்வதற்கான நியாயமும்கூட” என நவீன இஸ்லாமிய அறிஞரும் அல்குர்ஆன் விளக்கவுரையாளரு மான ஷெய்க் ரஷீத் ரிழா கூறுகிறார்.
“ஈமானியப் பற்று மிக்க மக்களுக்கு கொள்கையை நிலை நாட்டுவதே அடிப்படை இலட்சியம். அதில் பிடிவாதமாக இருப்பவர்களுக்கு இக்கருத்தை ஜீரணிப்பது முடியாத காரியமல்ல. நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் ஒரு முஸ்லிம் கலந்துகொள்ளும்போது, பொதுவான சீர்கேடுகளை சீர்திருத்த உழைக்கும்போது அனைத்து மக்களோடும் அவன் கலக்கின்றான். அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கின்றான். சொந்த மக்கள் மீது மட்டுமன்றி, யார் மீது அநியாயம் நிகழ்ந்தாலும் அவன் குரல் கொடுக்கின்றான். இதுவே ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வொழுங்காக மாறும்போது அச்சமூகம் நிச்சயம் மக்கள் மனதில் இடம்பிடிக்கும். முஸ்லிமல்லாதோர் அவர்களை கண்ணியத்தோடு பார்ப்பர்.”
- அபுல் ஹஸன் அலீ நத்வி
நூலிலிருந்து...
Be the first to rate this book.