'பாவப்பட்ட மனிதர்கள்" என்ற நாவலுக்குப் பிறகு, தஸ்தயெவ்ஸ்கி எழுதிய சில சிறுகதைகள், குறுநாவல்களைத் தொடர்ந்து, அவரது பிற்காலப் பெரும் படைப்புக்களான, ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ ஆகிய காலத்தால் அழியாத மாபெரும் புனைவுகளுக்குக் கட்டியம் கூறும் வகையில் அவர் உருவாக்கியிருக்கும் மகத்தான செவ்வியல் படைப்பே 'சிறுமைகளும் அவமதிப்புகளும்".
இரத்தமும், சதையுமாய் அன்றாடம் நம் கண்முன்னர் உலவும் கள்ளம் கபடற்ற எளிய மக்களின் கண்ணீருக்குள் நம்மைக் கரைந்து போக வைத்து, அவர்கள் படும் சிறுமைகளுக்குள்ளும், காயங்களுக்குள்ளும் நம்மையும் மூழ்க வைத்து அவர்கள் பெறும் அனுபவங்களுக்குள் நம்மையும் சஞ்சரிக்க வைக்கும் உணர்ச்சிப் பெருக்கான இந்த நாவலை மொழிபெயர்த்த அனுபவம் என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.
* எம்.ஏ.சுசீலா
Be the first to rate this book.