க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு முன்னுரைகளை ஏன் தொகுத்துப் பார்க்க வேண்டும்? தான் குறிப்பிட்ட நூலை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்ததற்கு இன்ன காரணம் என்று முன்னுரைகளிலிருந்து அறியலாம். ‘அன்பு வழி’யை ஏன் மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை என்றார் ஒருவர். அவருக்கு க.நா.சு. அந்நூலின் முன்னுரையிலேயே பதில் தருகிறார். ஆனால் க.நா.சு.வின் பதில் அவரை எட்டாமல் போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. ‘அன்பு வழி’ நூலின் முன்னுரை முதல் பதிப்பில் உள்ளபடியே பிற்காலப் பதிப்புகளில் இடம்பெறவில்லை. முதல் பத்தியிலேயே செம்பாதி கத்தரித்து நீக்கப்பட்டுள்ளது. அந்நூலை மொழிபெயர்ப்பதற்கான காரணம் உள்பட முக்கியமான குறிப்புகளைக் கொண்ட பகுதி அது.
க.நா.சு.வின் முன்னுரைகளைத் தொகுக்கும்போது, ‘முன்னுரை’ என்ற சிறப்புடன் வந்தவை போக, இதுபோன்ற முன்குறிப்புகளையும் திரட்டுவதுதான் சரி. ‘சிரமமான காரியம்’ தொகுப்பில் இவை இரண்டும் உள்ளன.
- ஸ்ரீநிவாச கோபாலன்
Be the first to rate this book.