'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது.
நாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் திரையுலக சரித்திரத்திலேயே தனியொரு பாகம்.
ஒரு கொலை வழக்கில் கைதாகி, சிறை சென்று மீண்டபிறகும் என்.எஸ்.கேவால் திரையுலகில் அதே புகழுடன், பெருமைகளுடன் நீடிக்க முடிந்திருக்கிறது.
அதே கொலை வழக்கில் கைதான அந்நாளைய சூப்பர்ஸ்டார், எம்.கே. தியாகராஜ பாகவதரால் முடியாமல் போன விஷயம் அது!
என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை சுவாரசியமாக எழுதியிருக்கும் முத்துராமன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். 'சதுரங்கச் சிப்பாய்கள்' எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் வாசகர்களிடையே தனிக் கவனம் பெற்றவர்.
Be the first to rate this book.