உலகம் முழுவதுக்கும் பொன்மொழிகள் என்பது பொதுவானவைதான். தத்துவ ஞானிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் சொன்ன முத்தான வார்த்தைகள், தங்களது வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து அவர்கள் அள்ளித் தந்த பொக்கிஷ வரிகள். அவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை; வாழ்க்கை நடத்த வழி வகுப்பவை. அப்படிப்பட்ட மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் உணர்ந்து சொன்னவற்றில், 501 பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தனக்கே உரிய நகைச்சுவை நடையில் அளித்துள்ளார் நடிகர் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. உலக வாழ்க்கையை ஒரு சில வார்த்தைகளுக்குள் அடக்கித்தரும் இந்த சிந்தனை வரிகள், வாசகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்து, அவர்களின் மனதை இலகுவாக்கும். அதே நேரத்தில் அதன் கருத்துகளால் மனதை உத்வேகப்படுத்தும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எழுதப்பட்டிருக்கும் இந்தப் பொன்னான வரிகளை, ரயில் பயணத்தின்போதோ காத்திருக்கும் வேளையிலோ படித்து மகிழலாம்.
Be the first to rate this book.