சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது.
மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது!
இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது.
Be the first to rate this book.