‘எழுத்து’ இதழில் வெளியான ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற கட்டுரைத் தொடர் முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. தமிழ்ச் சிறுகதைகளுக்கு இலக்கியபூர்வமான தரத்தொகுப்பு ஒன்றை உருவாக்க க.நா.சு. மேற்கொண்ட முன்னோடி முயற்சியின் பதிவு இந்நூல். கதைத்தேர்வுக்கு அவர் வகுத்துக்கொண்ட நெறிகளும் எல்லைகளும் அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் விவாதத்திற்குள்ளானவை. இந்நூல் க.நா.சு.வின் கட்டுரைகளுடன், அவை குறித்து எழுந்த எதிர்வினைகளையும் தொகுத்து அளிக்கிறது. க.நா.சு. தேர்ந்தெடுத்த சிறுகதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.