ஒரு முக்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது, ஒரு பெரிய குழுவை வழிநடத்துவது என்று எந்தவொரு ப்ராஜக்டை எடுத்துக்கொண்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றுவது என்பது ஆகப் பெரிய சவாலான காரியம்.
அந்த வகையில், ஒரு ப்ராஜக்ட் மேனேஜர் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாகச் செலவிடவேண்டியிருக்கும். மிகச் சரியான திட்டமிடலகளும் அசாதாரணமான நிர்வாகவியல் பண்புகளும் இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து வெற்றிபெற முடியும்.
எந்தவொரு ப்ராஜக்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து, சிறந்த ப்ராஜக்ட் மேனேஜராகத் திகழ்வதற்கான பார்முலாக்கள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரு ப்ராஜக்டை வெற்றிகரமாக எடுத்து. திட்டமிட்டு, செய்து முடிப்பது எப்படி?
நிர்ணயித்த இலக்கை சிறந்த முறையில் அடைவது எப்படி?
குறித்த காலக்கெடுவுக்குள் ப்ராஜக்டை முடித்துக்கொடுப்பது எப்படி?
பணம், நேரம், ஆற்றல் அனைத்தையும் மிச்சப்படுத்தி வெற்றி காண்பது எப்படி?
பணி அழுத்தத்தைக் கடந்து மன அமைதி பெறுவது எப்படி?
ஸ்டீபன் பார்கர், ராப் கோல் இருவரும் மேற்கண்ட கேள்விகளுக்கு விரிவாக இதில் பதிலளிக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான தமது அனுபவத்தில் கண்டறிந்த வெற்றிச் சூத்திரங்களை உங்களுக்காக வழங்குகிறார்கள். இனி வெற்றி உங்களுடையது!
Be the first to rate this book.