1917ல் எகிப்தில் மைத்தீன் என்ற கிராமத்தில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார்கள். மிகவும் பயபக்தி நிறைந்த மார்க்கப்பற்றுள்ள குடும்பத்தில் வளர்ந்து வந்த ஸைனப் அவர்கள் மன்னர் பாரூகின் ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீன ஜிஹாதில் இக்வான் அல் முஸ்லிமீன் போர் முனையில் காட்டிய வீரதீரச் செயல்களால் கவரப்பட்டார்கள்.
அன்று முதல் அல் இக்வான் முஸ்லீமூன் இயக்கத்துடன் இணைந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டார்கள். அல் முஸ்லிமாத் என்ற பெண்கள் இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள் .
1965 ஆகஸ்ட் மாதத்தில் ஜமால் அப்துல் நாசரின் ஆட்சி காலத்தில் இக்வான்களுடன் தொடர்பு உள்ளது என்ற பெயரில் கைது செய்யப்பட்டு ஆறு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .
அன்று தொடக்கம் தன் வாழ்க்கையில் சந்திக்காத பெரும் பெரும் கொடுமைகளையெல்லாம் சிறைச்சாலையில் சந்தித்தார். அந்த அனுபவங்களை புத்தகமாக அவர் வெளியிட, அதன் ஆங்கிலப் பதிப்பான "Return of the Pharaoh" தமிழில் குலாம் முஹம்மத் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Be the first to rate this book.