வரவர ராவ் பிரபலமான தெலுங்கு கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவிதைகள் இந்தியாவின் பலமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்போது மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்ற்றவர்.
Be the first to rate this book.