பெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்போடு ஒத்ததாகவே உருவானது.' இனியும் ஒரு பாலின விரிசல், மூன்றாவது பாலின விரிசல் வரும் என்றும் அது தாயை மையப் படுத்தும் என்றும் அவர் கணிப்பிடுகிறார். இம்மாற்றம் நிகழும்போது வேறு மனநிலை மக்களிடம் தோன்றும் என்றும் இதற்காக தற்கால ஆண் கொலை இடம் பெறும் என்றும் சொல்கிறார். அதற்குப் பதிலாக, 'பெண்ணின் புரட்சி' ஊடாக ஒரு புதிய ஆண் உருவாக்கப் படுவார் என்கிறார். இன்று நிலவுவதை உயர்ந்த ஒரு சமூகத்தைக் கற்பனை செய்பவர்கள் பலரும் அத்தகைய சமூகத்தில் ஒரு புதிய ஆணையும் கற்பனை செய்கிறார்கள்.
- டாக்டர் ந.மாலதி
Be the first to rate this book.