கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிடுவது எதனால்? இப்படி பலவாறான வினாக்கள் எழுகின்றன.
நாம் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம். அதாவது; நுகர்பவரின், பார்ப்பவரின், கேட்பவரின்;
வாழ்வியல் சூழல், அவரின் வாழ்வியல் பண்பாட்டுச் சூழல், அவரின் பொருளாதார நிலை, அரசியல் புரிதல், அது பற்றிய அவரின் புரிதல்
என்பன போன்ற பல்வேறு கூறுகள், ஒன்றைக் கலையாகவோ அல்லது வெறுமையானதாகவோ தீர்மானிக்க உதவுகின்றன என்று வைத்துக் கொள்ளலாம்.
Be the first to rate this book.