நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
ஜேம்ஸ் கிளியரின் படைப்பு நியூயார்க் டைம்ஸ், டைம், ஆந்த்ரபிரெனூர் ஆகிய பத்திரிகைகளிலும் ‘சிபிஎஸ் திஸ் மார்னிங்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றுள்ளது. உலகம் நெடுகிலும் உள்ள கல்லூரிகளில் அவருடைய படைப்பு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. jamesclear.com என்ற அவருடைய வலைத்தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் அவருடைய மின்னஞ்சல்களைப் பெறுகின்றனர். அவர் தோற்றுவித்துள்ள ‘த ஹேபிட்ஸ் அகாடமி’ என்ற அமைப்பு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்வாழ்க்கையிலும் நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் பயிற்சி அளிக்கின்ற ஒரு முன்னணி அமைப்பாக விளங்குகிறது.
Be the first to rate this book.