ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலிக்கும் அற்புத சாட்சிகளாய் அமைந்தவை. இவர் தன் வாழ்க்கையோடு இணைந்த மனிதர்களை, அவர்கள் சுமந்த பாடுகளை எழுத்திலமைந்த ஆவணமாக மாற்றியிருக்கிறார். அதனால்தான் இவர் கூட்டிச் செல்லும் வெளிகளில் சலிப்பின்றி எம்மால் அவர் கூடப் பயணிக்க முடிகிறது. பயணத்தின் முடிவில் துளிக் கண்ணீர் சிந்தும் விழிகளோடு அவரிடமிருந்து விடை பெற முடிகிறது.இன்னுமொரு சந்திப்பிலும் நம்மிடமிருந்து கண்ணீரை உதிர வைக்கக் கூடிய கதைகளுக்கான அனுபவங்கள் அவரிடம் உண்டு. சந்திப்போம். கண்ணீர் உகுப்போம். அக்கண்ணீர்தானே அவரது எழுத்துக்களின் வெற்றிக்கான அத்தாட்சி.
Be the first to rate this book.