கன்னிப்பெண்ணானவள் தன் கட்டழகை தனிமையில் பார்த்து ரசிப்பது போல அவ்வப்போது என் கவிதைகளை நானே வாசித்து ரசித்துக்கொள்வேன்... வாழ்க்கை எனும் அனுபவப் பள்ளியில் பயில ஆரம்பித்த பின்பு என்னுள் இருந்த கவிதைகளைப் படைக்கும் பிரம்மா தூங்கச்சென்றுவிட்டான்... ஆண்டுகளின் ஓட்டத்தில் அவன் கோமாவிற்கே சென்றுவிட்டான்... அவ்வப்போது அழகான பெண்களை காணூம் போதும், பேசும் போதும், இடை இடையே அவன் உறக்கம் கலைந்து கன்னிகளை கவர சில கவிதைகளை படைத்துவிட்டு சென்றுவிடுவான்... என்ன நினைத்தானோ தெரியவில்லை... தற்போதெல்லாம் உறங்காமல் என்னுடன் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறான்... கவிதைகளைப் படைத்து, எனை எழுதுகோல் பிடித்து எழுதச்சொல்கிறான்... “தமிழுக்கு தொண்டு செய்வோம் சாவதில்லை” என்ற பாரதிதாசனின் வரிகளால் பாதிக்கப்பட்டேன்... அதன் விளைவாக என் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறேன்...
Be the first to rate this book.