கவிஞர் பாரதன் ஒரு காந்தியச் சிந்தனையாளர். சமரசமில்லாத சமய நல்லிணக்கப் போராளி. ஐம்பது ஆண்டுகால பொதுச் சேவைக்குச் சொந்தக்காரர். 15 நூல்களின் ஆசிரியர். பிரபலமான பட்டிமன்ற நடுவர். இடியென முழங்கும் சொற்பொழிவாளர்.
இவரின் தந்தை நேதாஜியோடு பணியாற்றியவர். அஹிம்சை என்பது கோழைகளுக்கானதல்ல. நெஞ்சுரமிக்க வீரர்களுக்கானது. சிப்பாயைக் கண்டு அஞ்சுபவர்களாக, ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பவர்களாக, எப்போதும் கை கட்டுபவர்களாக, யாரிடத்திலும் பூனையைப் போல் ஏங்கி நடப்பவர்களாக இருந்த இந்திய மக்களை எதற்கும் துணிந்தவர்களாக மாற்றிய மாயாவி காந்தி என்ற மாமனிதர். இதற்கு இந்த நூலிலுள்ள முதல் கட்டுரையே சான்று.
Be the first to rate this book.