அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். அவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘சிண்டாய்’ வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘வல்லினம்’ இணைய இதழில் ’நிலமும் துயரமும் மனிதர்களும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையிலிருந்து சில பத்திகள்.... /இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது./
முழு கட்டுரையையும் வாசிக்க இணைப்பு முதல் கமெண்ட்டில் ...
Be the first to rate this book.