இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், சூழலியல், தொழில்நுட்பம், வானியல் என்று பல துறைகளின்மீது ஒரே சமயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரபஞ்சம் மிக வினோதமானது. சிக்கலாகத் தோன்றும் விஷயங்களை எளிமையான கோட்பாடுகளும், எளிமையாகத் தோன்றும் விஷயங்களைச் சிக்கலான கோட்பாடுகளும் இயக்குகின்றன. நம்மைச் சுற்றிய ஒவ்வொன்றின் பின்னாலும் ஆச்சரியப்படத்தக்க செய்திகள் ஒளிந்திருக்கின்றன. அந்தச் செய்திகளையும், நம்முடைய ஒவ்வொரு நகர்வும் இந்த பூமியை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பதையும், அவற்றிற்கு முன்வைக்கப்படும் தீர்வுகளையும் இந்தப் புத்தகம் அலசுகிறது.
நம் வாழ்க்கைத் தரத்தை, ஏன் வாழ்க்கையையே சில நேரத்தில் தீர்மானிக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்டிருக்கிற அறிவியலை கலைச்சொற்கள் கொண்டு பயமுறுத்தாமல், எளிமையாய், முதல் முறையாக யானையைக் கண்டு பயப்படும் குழந்தையின் கைப்பிடித்து அருகில் கூட்டிச்சென்று காண்பிப்பதுபோல, மக்களுக்குக்கொண்டு சேர்ப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார் நூலாசிரியர் ஹாலாஸ்யன்.
Be the first to rate this book.