கிருத்துவ மதக்குடும்பத்தில் பிறந்த ராஜ்கௌதமன் அம்மத இறுக்கத்தால் தமது இயல்பு வாழ்க்கை தடைபடுவதையும், அம்மதத்தின் மூடநம்பிக்கைகளையும், பாதிரியார்களின் போலித் தன்மையையும் தனது சிலுவைராஜ் சரித்திரத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் கிருத்துவர்களின் வரவால் தலித் சமூகத்தில் ஏற்பட்ட மதமாற்றம், கல்வி, நாகரிகம் போன்ற மாற்றங்கள் எனப் பல இருப்பினும் கூடக் கிருத்துவமும் இந்துமதத்தின் ஒரு பிரதியாகவே செயல்பட்டது என்பதைப் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.