சிலாவம். முத்துக்குளித் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலைப் பேசும் அரிய எழுத்துச் சிப்பி இது. முத்துக்குளிப்போரின் பாடுகள், அவர்களின் நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், வைத்தியமுறைகள், சடங்குகள், விழாக்கள், வாய்மொழிக் கதைகள் என வாசகரின் கைப்பிடித்துச் சென்று கடல் மேலும், கடலாழத்திலும் நீர்மையோடு உலவச் செய்யும் பாங்கான இந்நாவல் நெய்தல் இலக்கியத்திற்கு காத்திரமானதொரு வரவு. தாயில்லாப் பெண்டிர் மீதான தந்தையின் பாசம், காதலின் வலிமை, காத்திருப்பு, நட்பின் உன்னதம் இவற்றை அழுத்தமாகப் பேசுவதோடு கடலோரக்கரைவாழ் மக்களின் நெருக்கடிகளையும் பிரச்சனைகளையும் விரிவாக முன்வைக்கும் நாவல்.
Be the first to rate this book.