‘புதிய பார்வை’யில் வெளிவந்த ‘நினைவில் நிற்கும் இதழ்கள்’ தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. ‘குயில்’, ‘திராவிட நாடு’, ‘தென்றல்’, ‘முரசொலி’, ‘குறிஞ்சி’, ‘தமிழ்நாடு’, ‘செங்கோல்’ போன்ற திராவிட தமிழ் இயக்க இதழ்களுடன் ‘சரஸ்வதி’, ‘எழுத்து’, ‘நடை’, ‘கசடதபற’, ‘தீபம்’, ‘ஞானரதம்’ போன்ற இலக்கிய இதழ்கள் உள்பட 32 தீவிர இதழ்கள் பற்றிய விரிவான தகவல் களடங்கிய நூல்.
இந்த இதழ்களின் பின்புலத்திலுள்ள மனிதர்களின் ஆசை நிராசைகள், வெற்றி தோல்விகளைக் கூறும் இந்நூல், சில தீவிர அரசியல் இலக்கிய இதழ்கள் குறித்த அரியதொரு தகவல் களஞ்சியம். தொடராக வந்தபோது விடுபட்டுப்போன இதழாசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் இதழாசிரியர்கள் பற்றிய குறிப்புகள், இதழ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட நூலாசிரியர் பட்ட சிரமங்களை விளக்கும் விரிவான முன்னு ரையுடன் கூடிய பதிப்பு இது.
Be the first to rate this book.