புதுமை என்ற பெயரில் பொதுமைக்கு எதிரான கருத்துகளை பொத்தாம் பொதுவாக முன்வைப்பவர்களுக்கு குறிப்பான சில பதில்கள்..., பொதுமைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட சிலர் முன்னெடுக்கின்ற புதுமைச் செயல்பாடுகள் பொதுமைக்கு எதிரானவை என்ற சுட்டிக்காட்டல்..., கலை, இலக்கியத் தளத்தில் சிலரின் படைப்புத் திறனும் முன்வைப்புகளும் எந்த அளவிற்கு அபத்தம் என்பதை வெளிக்கொணர்தல்..., தன் தலையின் பின்புறத்தில் ஒளிவட்டம் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் சிலருடைய ஒளிவட்ட விளக்குகளை உடைத்தல்..., கலை, இலக்கிய, விளையாட்டு, பண்பாட்டுத் தளங்களில் ஊடாடும் லாபநோக்க வணிகத்தை அடையாளம் காட்டல்..., அறிவுச் செயல்பாடுகளை மறுதலித்து Ôஉணர்ச்சி நிலைÕ அரசியலுக்குப் பலியாகும் உழைக்கும் வர்க்கத்தின் நிலை அறிவித்தல்... / அறிவூட்டல்... என அனைத்தும்… … … ஆதங்கமாய், ஆவேசமாய், ஆலோசனையாய்... சில பத்திகளும் பக்கங்களும்
Be the first to rate this book.