பல்வேறு நூல்களின் மீதான தன்னுடைய பார்வையை மதிகண்ணன் முன்வைத்துள்ளார். பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் என மொத்தம் இருபத்து ஐந்து நூல்கள் மீதான அறிமுகங்களும் விமர்சனங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
நூல்கள் குறித்த உரைகளின் தொகுப்பாக ‘தராசை முதலில் எடைபோடு’ 2020-இல் வெளியானது. புனைவெழுத்துகளைத் தாண்டி விமர்சனத் தளத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மதிகண்ணன் நடுநிலையான விமர்சகர் என தன்னைச் சொல்லிக் கொள்வதில்லை.
‘என்பார்வை என்படைப்பு… உன்பார்வை உன் விமர்சனம்’ என்ற கவிஞர் விக்கிரமாதித்யனின் வரிகளுக்கேற்ப அவரவர் சார்பு நிலையுடன் முன்வைக்கப்பட்ட எழுத்துகள்மீது தனக்கான அரசியல், அழகியல் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நடுநிலையான விமர்சனம் என்பது பொய்தானே? அப்படி பொய்கள் ஏதும் இந்நூலில் இல்லை.
Be the first to rate this book.