சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா? ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி.
அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும். சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும். கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும். ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும்.
செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி? வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்? முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது? சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா? பங்குச்சந்தையில் பணம் போடலாமா? தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா? அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா?
நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது.
Be the first to rate this book.