'சிக்கவீர ராஜேந்திரன்' கர்னாடக மாநிலத்திலுள்ள குடகுப் பிரதேசத்தில் ஆட்சி செலுத்தி வந்த அரசனின் பெயர். இந்த அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி அரசனுக்குரிய நேர்மையான பாதையிலிருந்து விலகியதும், அரச குடும்பத்தினரிடையே நிலவிய பூசல்களும், அவர்களில் சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடத் தொடங்கியதுமே இதற்கு முக்கியக் காரணங்களாயிருந்தன. இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டிப் புனையப்பட்ட இந்நாவல், ஓர் அரசின் வீழ்ச்சி ஒரு நாளில் நிகழ்வதல்ல, அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள் மீது வெவ்வேறு சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஓட்டிப் படிப்படியாக நிகழ்கிறது என்பதை அழகாகச் சித்தரிக்கிறது.
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமரிசனம் முதலிய பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து தற்காலக் கன்னட இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிப்பவர். கலைத் திறனும் முதிர்ந்த அறிவும் ஒருங்கே அமைந்த அவருடைய எழுத்தாற்றலுக்கு இந்நாவல் ஒரு நல்ல உதாரணம்.
Be the first to rate this book.