தமிழக அரசின் சிறந்த புதினத்திற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றவரும் சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், மொழிபெயர்ப்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு வகைமைகளில் இதுவரை 35 படைப்புகளைக் கொடுத்துள்ளவருமான எஸ்ஸார்சி அவர்களின் எட்டாவது புதினம், ’சிகா’.
சாதிய அமைப்பு என்னும் சமூக அவலம், சக மனிதரை ஒடுக்கி திக்கம் செலுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. உயர்சாதி எனக் கருதப்படுவோருக்குள் ஒதுக்கப்பட்டோராக வாழும் குருக்கள் சமூக மக்களின் வாழ்வியலை, ’சிகா’ விரிவாகப் பேசுகிறது. சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முந்தைய கடலூர் மாவட்டம் இந்த நாவலின் கதைக்களம். பெண் கல்வியின் முக்கியத்துவம், ஆன்மிகவாதிகளுக்குள் பிரதிபலிக்கும் பகுத்தறிவுக் கருத்துகள், கிராம, நகர வாழ்க்கைக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள், அக்கால மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட பலவற்றையும் மிக யதார்த்தமாகவும் மிக எளிய நடையிலும் வட்டார வழக்குமொழியில் பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர் எஸ்ஸார்சி. நாவலின் போக்கில் சில முக்கிய நூல்களையும் படைப்பாளர்களையும் தலைவர்களையும் வாசர்களுக்கு அறிமுகம் செய்தும் வைக்கிறார்.
சமூகநீதிக் கோட்பாட்டின் மீதான புதிய பார்வையையும் சமூகநீதியின் பரவலாக்கம் குறித்தான தேவையையும் இந்தப் புதினம் முன்மொழிகிறது.
Be the first to rate this book.