வானொலியியில் ‘இன்று ஒரு தகவல்’ மூலம் இவர் எடுத்துச் சொன்ன நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற இயல்பான அறிவியல் பூர்வமான மேலாண்மைச் சிந்தனைக் கருத்துக்கள் அடங்கிய 46 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எஜமானராக(leader) செயல்பட வேண்டுமா? தலைவராக செயல்பட வேண்டுமா? எஜமானராகச் செயல்படுபவர் அதிகாரத்தை மட்டுமே செலுத்திக் குறைகளை மட்டுமே கூறி நெருக்கடி கொடுத்து வேலை வாங்குபவர். தலைவரானவர் அன்பைச் செலுத்திப் பணியாளர்களை உற்சாகப்படுத்திக் குறைகளை நிறைகளாக மாற்றித் தனக்கு வேண்டிய பணிகளைப் பெறுபவர்.
ஆகவே ஒரு செயலை மகிழ்ச்சியுடன் செய்தால் அந்தச் செயல் மிகவும் எளிமையானதாகிவிடும். “இயந்திரங்கள் உழைப்பதினால் தேய்வதில்லை. உராய்வதினால்தான் தேய்கின்றன. மனிதனும் அப்படித்தான்! வேலை செய்யாத மனிதன் துருப்பிடித்துப் போவான்! உழைப்பதினால் மனிதன் தேய்ந்து போய்விட மாட்டான்.
Be the first to rate this book.