நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்!
சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.
மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.
அடர்ந்த காடுகள். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம்... ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள். வகைவகையான மூலிகைச் செடிகொடிகள்.சித்தர்கள் வசித்த குகைகள்.ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள்.இன்னும் எத்தனையெத்தனையோஅற்புதங்கள்!
இயற்கை ஒளித்துவைத்திருக்கும் கானக அழகைத் தேடி தேடிக் காண்பதே மனத்துக்கு சுகம்தான். அதைக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.
படித்து முடித்ததுமே நீங்கள் சதுரகிரி போகத்திட்டமிடுவது நிச்சயம்!
Be the first to rate this book.