இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன் சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ் சமூகத்தின் பண்பாடு, கலாசாரம், விழுமியம் என்பவற்றிற்கு மேலாகத் துயர் மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது.
சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக உடன் வருகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் சிற்ப நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருப்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
‘சித்தன் சரித’த்தை சினுவா அச்சிபேயின் ‘சிதைவுக’ளோடு ஒப்பிடத் தோன்றுகிறது.
Be the first to rate this book.