காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அங்கிருந்த மூலிகைச் செடிகளை ஆராய்ந்து, மக்கள் நலனுக்காகத் தந்த மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், கை வைத்தியம் என்று சொல்லப்படுபவை எல்லாமே சித்த மருத்துவ முறையின் ஒரு பகுதிதான்.
மிகவும் எளிமையாக, மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்திருப்பது சித்த மருத்துவம். பக்க விளைவுகள் இல்லாத, நோய் அண்டாமல் காக்கும் யோக முறைகள் அடங்கிய மிகச் சிறந்த மருத்துவ முறை இது.
இப்போது பிரபலமாக இருக்கும் ஆங்கில மருத்துவ முறையில், குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு இதில் மருந்துகள் உண்டு. இன்று உலகையே பயமுறுத்திவரும் எய்ட்ஸ் நோய்க்கு, சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி கிட்டியிருப்பதே இதற்குச் சான்று.
நோய் வராமல் உடலைக் காப்பது, நோய் தீர்க்கும் மூலிகைகள், பத்திய முறைகள், வர்ம மருத்துவம், யோக முறைகள் என எல்லாவற்றைப் பற்றியும் எளிமையாகச் சொல்வதுடன், சித்த மருத்துவத்தின் பெருமைகளையும் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
இந்த நூலை எழுதியிருக்கும் டாக்டர் P. சுகுமாரன், சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து, தரும்புரியில் அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
Be the first to rate this book.