சித்தர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன மூலிகை மருந்துகள் என்பதை எழுதி வைத்துள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
மனித உடலில் செயல்படும் ஒன்பது மண்டலங்கள் என்னென்ன?
தலை முதல் கால் வரை, மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?
எந்த நோய்க்கு என்ன மருந்து? அதைத் தயார் செய்வது எப்படி?
கடைகளில் எளிதாகக் கிடைக்கும் மூலிகை மருந்துகள் என்னென்ன?
மருந்துகளை எப்போது, எவ்வளவு சாப்பிடுவது? எவ்வளவு நாளில் நோய் குணமாகும்?
என்பது உள்ளிட்ட, சித்த மருத்துவம் தொடர்பான மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய முழுமையான சித்த மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா, மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி. பட்டமும், இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ சான்றிதழும் பெற்றவர். மருத்துவப் பணியிலும், மருந்துகள் செய்முறையிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள தன்னுடைய ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், உடல் பருமன், மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்.
Be the first to rate this book.