ஈழப்போராட்ட நாவல்கள் வரலாறு குறித்தும் யதார்த்தச் சொல்நெறியாலும், தப்பினால் வரலாற்றை மறுக்கும் மிகுகற்பனைகளாலும் ஆனதாகவே இருந்து வந்திருக்கின்றன. கையறுநிலை விரக்தியாகவும், கேலிப்புன்னகையாகவும் அபத்தக்கனவாகவும், சமவேளையில் தோற்றம் காட்டும், தீராத வலியையும் ஆற்றமுடியாத சீற்றத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பங்கள்’ நாவல், வரலாற்றினுள்ளும் வரலாறு கடந்தும் நின்று, தொன்மங்கள், வரலாறு, அதிபுனைவு, சமகால யதார்த்தம் என அனைத்தையும் மேவி நமது நெடிய யுகத்தின் கதையாக ஆகியிருக்கிறது.
–யமுனா ராஜேந்திரன்
Be the first to rate this book.