இது வேறொரு மொழி.
இது வேறொரு வானம்.
இது வேறொரு போதி.
இது வேறொரு சித்தார்த்தன்.
புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ்.
முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார். அப்புறம் அவர் கண்டெடுக்கும் சூரியச் சொற்களால் ஒவ்வொரு கவிதையும் சூரியக் கூட்டமாகிறது. அதன் வெளிச்சத்தில் வனம் சூரியப் பிழம்பாகிறது.
“ஆதியில் சொற்கள் இருந்தன அவை தேவனோடே இருந்தன” என்ற விவிலியத்தின் நீட்சியாக தீபிகாவின் சொற்கள் புது சௌந்தரியத்தோடு சித்து விளையாடுகின்றன.
- ஆண்டாள் பிரியதர்ஷினி
Be the first to rate this book.