பதினோராம் நூற்றாண்டில் பக்தியில் மனித குலத்தின் சமத்துவம் கண்டவர், ஸ்ரீராமாநுஜார். ஆழ்வார்களின் பிரபத்தி நெறியை, கீதையின் உட்பொருளை, உயர்வு, தாழ்வு கருதாது, வர்ணம், அந்தஸ்து, ஆண், பெண், துறவியர், இல்லறத்தார் என்ற எந்தப் பிரிவினைகளையும் கருதாது ஆசையுடைய அனைவருக்கும் தாமும் போதித்துத் தம் வழிவந்தோரும் அவ்வண்ணமே போதிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஸ்ரீராமாநுஜரைப் பற்றிய நூல் இது. பிரபத்தியில் சமத்துவம் கண்ட அவருடைய பெருமையைத் தக்க சான்றுகள், நூல்குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவுவது இந்த நூலின் சிறப்பு.
Be the first to rate this book.