நவீனத் தமிழ்ச் சூழலில் இசையைப்போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர் வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீகக் கோபத்துடனும் அறச் செருக்குடனும் வெளிப்படுத்துகின்றன இசையின் கவிதைகள். இது இவரது மூன்றாவது தொகுப்பு.
Be the first to rate this book.