பாபா மனிதர்களை பார்த்தார். அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தார். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கூறினார். எதையும் உபதேசமாகச் செய்யவில்லை. மக்களைத் தட்டி எழுப்புவதே அவர் செய்த காரியம். அவரிடம் தத்துவங்கள் கிடையாது. சத்தியம் இருந்தது. பாபா எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது பெயருக்கு ஒரு சக்தி இருக்கிறது. அவரைப் பார்க்காதவர்களும் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். சாதி, மதம், இனம், என்கிற பாகுபாடுகளைக் கடந்து மக்கள் அவரிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் அடிப்படையில் ஒரு பொதுவான அம்சம் இணைத்தது. அது-பாபாவின் மீதான நம்பிக்கை. எல்லாக் கால்களும் ஷிர்டியை நோக்கியே நடந்தன. ஒன்று பாபாவின் உதவி கேட்டுப் போகும்; அல்லது தாம் பெற்ற உதவியை மனதில் கொண்டு நன்றி செலுத்துவதற்காகப் போகும்.
Be the first to rate this book.