அம்பை, சிகண்டினி, சிகண்டி என முப்பிறப்புகளைக் கொண்ட சிகண்டி என அறியப்படும் கதாபாத்திரம், மகாபாரதக் கதைகளில் மிகவும் முக்கியமான, சுவாரசியமான, சிக்கலான பல வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரமாகும். அம்பையாகப் பிறந்து, சிகண்டினியாக மறுபிறவி எடுத்து, சிகண்டியாக உருமாற்றம் அடைந்த சிகண்டினியின் வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது.
அத்தகைய போராட்டம் நிறைந்த சிகண்டினியின் வாழ்க்கையை இந்தப் புத்தகம் அதே வலிகளுடன் காட்சிப்படுத்துகிறது. அம்பைக்கு நேர்ந்த அவமானம், வீரப் பெண்ணாக இருந்தும் சிகண்டினி அடைந்த வலி, புறக்கணிப்பு, சிகண்டியாக மாறுவதற்கு அவள் ஏற்ற உறுதி, சிகண்டியின் வீரம் ஆகியவற்றை இந்த நாவல் நிஜமும் புனைவும் கலந்த வசீகர எழுத்தில் பதிவு செய்கிறது.
அஷ்வினி ஷெனாய் எழுதி ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவலை அதியன் ஆறுமுகம் தேர்ந்த தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். சிகண்டினியைக் குறித்து தமிழில் வெளியாகும் முழுமையான முதல் நாவல் இது.
Be the first to rate this book.