எர்ணாகுளத்தில் பிறந்து பீகார் மாநிலத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும் என்.எஸ்.மாதவனின் எழுத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டவை. இவருடைய 'ஹிக்விக்டா' என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற என்.எஸ்.மாதவனின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார் கே.வி.ஷைலஜா.
மலையாள எழுத்தாளர். 1948-இல் எர்ணாகுளத்தில் பிறந்தார். மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர். இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. 1970-இல் மாத்ருபூமி பத்திரிகை கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘சிசு’ மூலம் மலையாளத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்ற இடத்தைப் பிடித்தார். கேரள மாநில சாகித்ய அகாதமி, ஓடக்குழல் விருதுகள் பெற்றவர். மூன்று முறை சிறந்த சிறுகதைக்கான கதா விருது பெற்றவர்.
Be the first to rate this book.