இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல் அவர்களின் ஆட்சி மற்றும் கலிபாக்கள் ஆட்சி பொற்காலமாக திகழ்ந்தது. காலபோக்கில் ஆட்சியின் வீழ்ச்சியாலும் குழப்பங்களாலும் அனாச்சாரங்கள் தலைத்தோங்கின. ஏழாம் நூற்றாண்டு அனாச்சாரங்கள் உக்கிரப்பட்ட காலகட்டம். தாத்தாரியர்களின் படையெடுப்புக்கு பின் இஸ்லாமிய உலகே சின்னாபின்னமானது. ஆட்சியாளர்கள் தங்கள் எல்லைகளை பாதுகாக்க முனைந்தார்களே ஒழிய இஸ்லாமிய கோட்பாடுகளை காக்க முன்வரவில்லை. அக்காலகட்டத்தில் ஒவ்வோர் பகுதிகளும் மார்க்க மேதைகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இருந்தும் மக்களை திரும்பி பார்க்க வைக்கும் பலம் அவர்களிடமில்லை. இந்த நிலையில் இப்னு தையமிய்யாவின் சேவை பெருமளவு இஸ்லாமிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிகோலியது. இருந்த போதும் அன்று முதல் இன்று வரை இப்னு தைமிய்யா பற்றிய தூற்றல் கருத்தும் போற்றல் கருத்தும் நிலவிக்கொண்டேதான் வந்திருக்கிறது.
இப்னு தைமிய்யா யார், அவர் செய்தவை என்ன, போற்றப்படவும்-தூற்றப்படவும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.