பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதைகளில், மாபெரும் இஸ்லாமிய ஆளுமைகளில் ஒருவர் ஷாஹ் வலியுல்லாஹ். அவர் ஒரு மேதைமட்டுமல்ல, கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஞானிகளின் குடும்பத்தில் பிறந்த இறைநேசர். இந்தியாவில், அல்லது உலகில், முதன் முதலாகத் திருக்குர்’ஆனை அரபியிலிருந்து பாரசீகத்துக்கு மொழிபெயர்த்தவர். மார்க்கத்தின் அகமியங்களை விளக்கி அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடியவர். ரஹீமிய்யா என்று ஒரு மார்க்கக்கல்லூரியை நடத்திக்கொண்டே இதெல்லாம் செய்தவர்.
ஷாஹ் வலியுல்லாஹ் என்ற விருட்சத்தின் கிளைகளில் ஒன்றான நாகூர் ரூமி அவர் வாழ்க்கை மற்றும் படைப்புலகம் பற்றி எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு.
Be the first to rate this book.