பழங்குடியின மக்களின் கதைகள் எப்போதுமே கேட்பதற்கும் படிப்பதற்கும் இனிமையானவை. சில சமயங்களில் வினோதமானவை. ஏனென்றால், அவை எவ்வித ஜோடனைகளும் பாவனைகளும் இன்றி வரையப்பட்ட சொற்சித்திரங்கள்.
எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பின்பற்றும் நடைமுறைகள், சடங்குகள், அவற்றின் மீது அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைகள், இயற்கையின் மீதான அவர்களது காதல், கட்டற்ற சுதந்திரம் போன்றவற்றை எடுத்துரைக்கும் இக்கதைகள், நம்மையும் அவர்களது வாழ்வை வாழ்ந்து பார்க்கச் சொல்பவை.
உலகின் தொன்மையான பழங்குடி இனங்களுள் ஒன்றான செவ்விந்தியர்களின் கதைகள், உங்களைப் பரவசப்படுத்தலாம், புன்னகைக்க வைக்கலாம், உலகிலுள்ள பல்வேறு பழங்குடியின மக்களுக்கு இடையேயுள்ள சில ஒற்றுமைகளைக் காட்டி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். யார் அறிவார், உங்களைத் திடுக்கிடவும் வைக்கலாம்,
மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் இந்தக் கதைகள் எளிய தமிழில், அழகிய நடையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
Be the first to rate this book.