பழங்குடி மக்களின் மொழி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் மட்டுமே நவீனத்துவம் தழைக்க முடிகிறது என்பதற்கான சான்று இந்த நாவல். சேவல்கட்டை மக்களின் மொழியோடு புனைவின் தெருக்களில் நடந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தமிழுக்கு புதிது. சி.சு. செல்லப்பா காளைகளைப் பற்றி எழுதிய வாடிவாசல் போல், முழுக்க முழுக்க சேவல் சண்டையைப் பற்றி வெகுநுட்பமாக மனிதனுக்கும், சேவலுக்குமாகவும், சேவலுக்கும் மனிதனுக்குமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. சேவல் சண்டையைப் பற்றி வந்துள்ள முதல் தமிழ் நாவல். புதிய மரபை தமிழில் தோற்றுவிக்கும். பனை விருட்சி, ஊர்களில் அரவாணி, பெருந்தாழி ஆகிய சிறுகதை தொகுதிகளையும், உள்வெளி கவிதை நூலையும் எழுதியுள்ள ம. தவசியின் முதல் நாவல் இது.
Be the first to rate this book.